நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து தபால் ஊழியர்களுக்கும் மாதாந்தம் 20,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இன்று திங்கட்கிழமை (25) நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண, தபால் வருவாயை அதிகரிக்கும் சட்ட மேம்பாட்டு முன்மொழிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்களை ஒடுக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், ஊழியர் உரிமைகளை பறிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் 25 தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மதிய உணவு நேரத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments