திருகோணமலையில் இன்று இரவு தந்தையும்,மகளும் எடுத்த விபரீத முடிவு
திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற இரவு தபால் சேவை ரயில் முன் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (06) இரவு கந்தளாய் - பராக்கிர மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரயில் முன் பாய்ந்து
திருகோணமலை - கந்தளாய் புகையிரத நிலைய தண்டவாளத்தின் அருகே தந்தையும், மகளும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும், மகளும் ரயிலின் முன்னே பாய்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இன்று இரவு தந்தையும்,மகளும் எடுத்த விபரீத முடிவு | Trinco Father And Daughter Committed Suicide
இச்சம்பவத்தில் 38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments