ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படும்..
ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தன எம்பி
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை உரிய காலத்தில் அரசாங்கம் நடத்துமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இத்தேர்தல்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், ஒதுக்கப்படாவிடினும் மீண்டும் எதிர்காலத்தில் இதற்கான நிதியைப் பெற்று, இந்த தேர்தல்களை ஜனாதிபதிக்கு நடத்த முடியும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய தேர்தல்கள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக காணப்படவில்லை. அவை, வேறு சட்டங்களின் கீழ் உள்ள கட்டளைகளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ,ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு எவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வஜிர அபேவர்தன எம்பி,
வரவு செலவுத் திட்டமானது ஒரு கற்பனை கதை அல்ல. இவ்வாறான கதை அல்லாத வரவு செலவு திட்டத்தையே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
No comments