Vettri

Breaking News

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மன்சூர் தலைமையில் ஒரு குழுவினர் இந்தியா பயணம்!




கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானின் அறிவுருத்தல்களுக்கமைவாக, 4 நாள் இந்தியா – மதுரைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் ஒரு குழுவினர் இன்று (05) பயணமானர். இந்த விஜயத்தின்போது, இந்தியா - மதுரையில் அமையப்பெற்ற மிக முக்கிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற பல இடங்களை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்திட்டங்களை பார்வையிட்டு அது தொடர்பான விடயங்களை அறிந்துகொண்டு, கிழக்கு மாகாணத்தில் அந்த அபிவிருத்தி விடயங்களை எவ்வாறு அமுல்படுத்தி கிழக்கு மாணத்தை முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்பதற்கான கள விஜயமாக இது அமைந்துள்ளது. இந்த விஜயத்தில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர், கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி யு.கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பயணமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments