Vettri

Breaking News

உலக 'ஏ' தர மத்திய வங்கி ஆளுநர்கள் பட்டியலில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவு




 2023 ஆம் ஆண்டுக்கான உலக 'ஏ' தர மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேர் பட்டியலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட "குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை" வருடாந்தம் நடத்தும் கணக்கெடுப்பின்படி, 'ஏ' தர மத்திய வங்கி ஆளுநர்களில் கலாநிதி நந்தலால் வீரசிங்க சேர்க்கப்பட்டுள்ளார்.

101  நாடுகளின்

மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகள் 2023 பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் 101 நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களை  தரவரிசைப்படுத்தியுள்ளது.

உலக

இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியா மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்ரீகாந்த தாஸ் 'ஏ' பிரிவில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments