தன்னிச்சையான ஒப்பந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரிய ஆர்ப்பாட்டம்!
அபு அலா -
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (05) இடம்பெற்றது.
திருகோணமலை - புல்மோட்டை தொடர்க்கம் நிலாவெளி வரையான கடற்கரைப் பகுதிகளில் புவி சத்திரவியல் சுரங்க திணைக்களத் தலைவரின் தன்னிச்சையான ஒப்பந்தத்தின் மூலம் கனிய மணல் அகழ்வதற்கான ஆராய்வு செய்வதற்கான அளவீடு நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியே இந்த கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பிரதேச வாசிகள், சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்தொழில் மீன்பிடி சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர்.
இதன்போது, “அழிக்காதே அழிக்காதே இயற்கை வளத்தை அழிக்காதே”, “சுரண்டாதே சுரண்டாதே மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதே”, “நிறுத்து நிறுத்து GSMB தலைவரின் தன்னிச்சையான முடிவை நிறுத்து”, “அழிக்காதே அழிக்காதே சுற்றுலாத்துறையை அழிக்காதே”, “மண் அகழ்வு ஒப்பந்தத்தை உடன் நிறுத்து” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்த குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதனிடம் குறித்த விடயத்தை நாட்டின் ஜனாதிபதி, கிழக்கு ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிய மகஜரினை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்து வைத்தனர்.
No comments