விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி: ஒருவர் கைது
கம்பளை, குருந்துவத்தை உடஹெந்தென்ன பகுதயில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நாட்டில் தாயரிப்பாட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியானது T-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் வகை தோட்டாக்களை சுடக்கூடிய துப்பாக்கி ஆகும்.
மேலதிக விசாரணை
அத்தோடு இந்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments