Vettri

Breaking News

இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்டத்தில் குடியிருப்பு தாக்கிச் சேதமாக்கப்பட்டது : மனோ கணேசன் எம்.பி. கண்டனம்!




 இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்தில் குடியிருப்பு ஒன்றும் தாக்கி சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடமும் இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளார். 




இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் அங்குள்ள தமது பிரதிநிதி ஊடாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தோட்ட காணியில் சட்ட விரோதமாக குடியிருப்பு அமைக்கப்பட்டால், அதனை சட்ட ரீதியாக கையாண்டு,  சட்ட ரீதியில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு, நீதிமன்றம் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாறாக, தோட்ட நிர்வாகம் சட்டம், ஒழுங்கை கையில் எடுத்து செயற்பட முடியாது. நிர்வாகம் சட்ட ரீதியிலான அணுகுமுறையை கையாளவில்லை என்பதை மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று மாத்தளை, ரத்வத்தை தோட்டம்; இன்று இது. பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்கவும், வாழ்வாதாரத்துக்கும் காணி உரிமை அவசியம் என்பதற்கு இது மற்றுமொரு சான்று எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

No comments