Vettri

Breaking News

ஆசிய கிண்ண போட்டிக்கான பற்றுசீட்டு விலைகளில் மாற்றம் - விலை விபரம் உள்ளே...




ஆசியக்கிண்ணத் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான பற்றுசீட்டுகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை(02) கண்டி - பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இவ்வாறான நிலையில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பற்றுசீட்டுகளின் விலைகளை அதிகமாக நிர்ணயித்திருந்தது. பல்லேகலை மைதானத்தின் புற்தரை பகுதிகளுக்கான பற்றுசீட்டுகளின் விலை 9600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான புற்தரை பகுதிகளுக்கான பற்றுசீட்டுகளை 1500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தியா - பாகிஸ்தான் மற்றும் நேபாளம் - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளுக்குமான பற்றுசீட்டுகளை ரசிகர்கள் கொள்வனவு செய்யும் பட்சத்தில் 2550 ரூபாவுக்கு இரண்டு போட்டிகளையும் ரசிகர்கள் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments