Vettri

Breaking News

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் பலி




 தற்போது இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாவலப்பிட்டி மாஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது புதிய மதிலுக்கான அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் உடல் மீது மண் மேடு விழுந்தே இச் சம்பவம் பதிவாகியுள்ளது.

srilanka current climate

பொது மக்களுக்கு எச்சரிக்கை 

மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நாவலப்பிட்டி, வெரலுகசின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

No comments