தொடருந்தில் மோதி இளைஞர் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து நேற்று (15) இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இளைஞன் உயிரிழப்பு
மஹவ மடபொகுன பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தற்கொலையா அல்லது விபத்தா என காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments