இன்று ஜேர்மன் நோக்கிப் புறப்பட்டார் ரணில்..
அதிபர் ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(27) அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பேர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் புறப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5.05 அளவில் கட்டார் நோக்கி பயணித்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.659 ரக விமானத்தில் சென்றுள்ளதாகவும் கட்டாரிலிருந்து அவர்கள் ஜேர்மன் நோக்கி செல்லவுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்
பேர்லின் உலக மாநாடு என்பது ஒரு புதிய சர்வதேச மன்றமாகும். இது உலக தலைவர்களை ஒன்றிணைத்து வணிகம் மற்றும் கொள்கையிலிருந்து உலகளாவிய பொருளாதாரத்திற்கான கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிவதாகும் .
ஆரம்ப உச்சிமாநாடு 2023 செப்டம்பர் 28 முதல் 29 வரை பேர்லினில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 24ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments