சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமி மாயம் : தீவிரதேடுதலில் காவல்துறை
சிறுவர் இல்லத்தில் இருந்த 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக, குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி பொறுப்பாளர் குளியாப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹலவத்த - கட்டுபொத்த எரோமா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளார்.
மஹவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுமி இந்த சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு
வடமேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு நேற்று (02) குளியாபிட்டிய ஷில்பா ஷாலிகா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
கட்டுபொத்த - எரோமா சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இந்த விளையாட்டு நிகழ்வில் பங்குபற்ற சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் சிறுமி காணாமல் போனதை அறிந்து காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குளியாபிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments