ரயிலுடன் சிறிய லொறி மோதி விபத்து : ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்
ரயிலுடன் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொட பிரதேசத்தின் கஹாவ பகுதியில் உள்ள கொடகம புகையிரத கடவையில் இன்று வியாழக்கிழமை (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபர் லொறியில் பயணித்த பத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
குறித்த நபர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments