சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா
யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இரு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய உதவிகள் தொடர்பான தகவல்கள் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் போர்த்தாங்கிகளை அழிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வெடி பொருட்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments