தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : மூவர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கப் ரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பகுதியில் 22.4 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
விபத்துக்குள்ளானகப் ரக வாகனத்தில் 06 பேர் பயணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், சாரதி தூங்கியதனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments