பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸிலிருந்து ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.
புளத்சிங்கள, கலஹேன பிரதேசத்தில் வசிக்கும் கொக்கல ஆராச்கே ரம்ய குமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புளத்சிங்கள நாரகல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்த இவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
No comments