மலையக மக்களுக்கான காணி உரிமம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலானது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என இதன்போது அமைச்சர் எடுத்துரைத்தார்.
வீடுகளுக்கும் காணி உரிமம்
அதற்கான பணிகள் இடம்பெற்றுவருவதாகவும், அவை இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமல்லாமல், பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரிமம் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
No comments