Vettri

Breaking News

நிலவி வரும் சீரற்ற காலநிலை: கொழும்பு மாவட்டம் அதிக பாதிப்பு!




  நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இலங்கையில் 6,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த இரண்டு நாட்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் கொழும்பு மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,199 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

srilannka

மேலும், சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 122 வீடுகளும் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

No comments