மீகொடையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை
மீகொட பிரதேசத்தில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தளபாட விற்பனை நிலையத்தில் இன்று(25) மதியம் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும், சந்தேகநபர்கள் 80 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மீகொட காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments