Vettri

Breaking News

யாழுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய




 இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கரு ஜெயசூரிய நேற்று காலை தொடக்கம் மதியம் வரை மானிப்பாய் சுதுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 

பின்னர், அவர் பிற்பகல் 4 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருகை தந்ததுடன், அங்கு இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்துகொண்டார்.

பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தானத்தின் விகாரைக்கு சென்றதுடன் ஸ்ரீ நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலரத்தன தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments