Vettri

Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் சாலே வெளியிட்ட தகவல்




 இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே, தானும் தனது குடும்பத்தினரும் அழுத்தத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுமார் 270 பேரைக் கொன்ற 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுவெடிப்பு தொடர்பில், கத்தோலிக்க பாதிரியார் ஒருவருக்கு எதிராக தாம் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பில், நேற்று சாலே  கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், சாலே50 மில்லியன் ரூபாயை கோரியுள்ளார்.

அவதூறு அறிக்கை

2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அருட் தந்தை சிறில் காமினி பங்கேற்ற, விவாதம் ஒன்றில், தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறு அறிக்கைகள் இருந்ததாக சாலே கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் சாலே வெளியிட்ட தகவல் | Suresh Sallay Under Pressure Report Easter Attack

அருட்தந்தை காமினியின் "குற்றச்சாட்டுக் கருத்துக்கள்" தனக்கும் அவரது குழந்தைகளுக்கும் கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும், கருத்துக்களின் தன்மையால் அவர்கள் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் சாலே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments