நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் 5000 வைத்தியர்கள்!
இலங்கையில் சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 விகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற படியால் நாங்கள் சுகாதாரத்துறை சம்பந்தமான பிரச்சினைகளில் அக்கறை செலுத்துகின்றோம் மேலும் அதில் ஏற்படுகின்ற சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்கின்றோம்.
மருந்து தட்டுப்பாடு
அவ்வாறே இந்த மருந்து தட்டுப்பாடு சம்பந்தமாகவும், புத்திஜீவிகள் வெளியேற்றம் சம்பந்தமாகவும், முக்கியமாக வைத்தியர்களுடைய வெளியேற்றம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கத்துக்கும் எங்களுடைய முன்மொழிவுகளை வழங்கி இருந்தோம்.
ஆனால் அது உத்தியோகபூர்வமான கூட்டங்களில் பரிசிலிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் எந்தவிதமான முன்னேற்றமும் வெளிப்படவில்லை, முதலாவதாக மருந்து மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டினை உற்று நோக்கினால், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்நிலை தொடர்கிறது.
No comments