தனது பெயரை தானே கெடுத்த கோட்டாபய: சனல் 4 அறிக்கையில் கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை
லங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட இழுக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள ஆவணத்திலேயே இந்த பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ என பொறிக்கப்பட வேண்டிய பெயரானது ("குர்துதுபூர்யு ருர்ஜபுக்ஷா" "කූර්ඩුඩුපුර්යූ රුර්ජපුක්ශ") என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ
இந்த நிலையில், தமிழில் பெயரை சரியாக குறிப்பிடாமை தொடர்பாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ சார்பாக தாம் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பட்டாளரான அனுராத பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளையும் பெறும் கோட்டாபய ராஜபக்ஸ, இந்த தவறை கட்டாயம் சரி செய்ய வேண்டும் எனவும் அனுராத பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments