யாழ்ப்பாணத்தில் 250,000 ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்
யாழ்ப்பாணம் நாகர்கோயில் முருகன் ஆலயத்தில் இறைவனுக்காக படைக்கப்பட்ட மாம்பழம் 250,000 ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
நேற்று(6) இரவு இடம்பெற்ற வருடாந்த திருவிழாவில் ஏலத்தில் ஒரு மாம்பழத்தை 250,000 ரூபாவுக்கு பெண் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.
அதேவேளை, வவுனியாவில் உள்ள இரண்டு ஆலயங்களில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற ஏலத்தில் இரண்டு மாம்பழங்கள் 165,000 ரூபா மற்றும் 180,000 ரூபாவுக்கு பக்தர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐதீகம்
இறைவனுக்கு படைக்கப்படும் இவ்வாறான மாம்பழங்களை பக்தர்கள் நுகர்வுக்காக வாங்குவதில்லை.
ஆனால் மாம்பழத்தை வெள்ளை துணியில் சுற்றி வீட்டின் முன் கதவின் மேல் தொங்கவிடுவது வீட்டிற்கு செழிப்பை தரும் என்பது ஐதீகம் என்று கூறப்படுகிறது.
No comments