1 of 22 கட்சியை புனரமைத்து வளர்க்கப்பட வேண்டுமே தவிர எமக்கு பதவி அவசியமில்லை -ஏ.சி யஹியாகான்
கட்சியை புனரமைத்து வளர்க்கப்பட வேண்டுமே தவிர எமக்கு பதவி அவசியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் தேசிய பிரதிப் பொருளாளருமான ஏ.சி யஹியாகான் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் 23 வது நினைவு தினம் சம்பந்தமாக மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை(1) இரவு நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர்
எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி மறைந்த மாமனிதர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் ஞாபகார்த்த தினமாக சாய்ந்தமருது பகுதியில் பிரமாண்டமான நிகழ்வு ஒன்றை நடாத்துவதற்கு தற்போது தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சாய்ந்தமருது பகுதியை இனிவரும் காலங்களில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 3 கண்கள் கொண்டு பார்க்க வேண்டும்.2018 ஆண்டு உயிரை பணயம் வைத்து இந்த கட்சியை பாதுகாத்துள்ளோம்.அத்துடன் சாய்ந்தமருது மத்திய குழு அனைவரையும் அழைப்பதற்கு ஒரு அலுவலகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்க எமது கட்சி தலைவர் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.இதனூடாக மத்திய குழுவை புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.இதற்காக ஒற்றுமையுடன் சகலரும் பயணிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.அத்துடன் கட்சியை புனரமைத்து வளர்க்கப்பட வேண்டுமே தவிர எமக்கு பதவி அவசியமில்லை என்பதை இவ்விடத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.
இதே வேளை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு அமைப்பாளர் ஏ.எம் பிர்தௌஸ் தலைமையில் மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் 23 வது நினைவு தினம் சம்பந்தமாக கலந்துரையாடல் நடைபெற்றிருந்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments