Vettri

Breaking News

புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – WHO எச்சரிக்கை!





புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – WHO எச்சரிக்கை!




கடந்த 2019-ம் ஆண்டு தோன்றிய கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்து உள்ளது.

இந்த வைரஸ் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ள சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
 
இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments