தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்த இளம் குடும்பஸ்தர் - யாழில் சம்பவம்...
யாழ்ப்பாணம், தென்மாராட்சி, மட்டுவில் கிழக்கில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (13) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், நெல்லியடி தபாலகத்தில் பணிபுரியும் 36 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments