கண்டி தலதா பெரஹராவை குழப்புவதற்கு அரங்கேறும் சதி திட்டங்கள்! சுட்டிக்காட்டும் சன்ன ஜயசுமண
கண்டி தலதா பெரஹராவை சீர்குலைக்கும் வகையில் யானைகளை லேசர் கதிர்கள் மூலம் பொறிவைக்கும் திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், பௌத்த ஊர்வலங்களை சீர்குலைக்கும் மற்றும் அவமதிக்கும் வகையில் திட்டம் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா பெரஹராவில் பயணிக்கும் யானைகளை சங்கடப்படுத்த சிலர் லேசர் கதிர்களை பயன்படுத்துவதாக யானை மேய்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேசர் கதிர்கள்
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் யானைகள் மற்றும் பிற விலங்குகளை விரட்ட பயன்படுத்தப்படும் லேசர் கதிர்களை வெளியிடும் சிறிய சாதனங்கள் சில வாரங்களுக்கு முன் விற்பனைக்கு வந்ததாகவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் இரண்டாவது கும்புல் பெரஹரா வீதியில் நடைபெற்ற எசல பெரஹராவில் இரண்டு யானைகள் திடீரென மதம்பிடித்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments