Vettri

Breaking News

அதிகரித்த இலங்கை ரூபாயின் பெறுமதி!




 நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது..

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 313. 37 ரூபாய் முதல் 312.39 ரூபாய் மற்றும் 328.78 ரூபாய் முதல்  327.76 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.51 ரூபாய் முதல் 310.77 ரூபாயாக குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி ரூபாய் முதல் 328 ரூபாய் முதல் 326 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியிலும் , அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 316 ரூபாய் முதல்  315 ரூபாய் மற்றும் 328 ரூபாய் முதல் 327 ரூபாய் ஆக குறைவடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 





No comments