Vettri

Breaking News

இக்பால் ஞாபகார்த்த கிண்ணம்-ஏறாவூர் ஜங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் வசமானது




பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகம் நடாத்திய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 22 முன்னணி உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை(26) அன்று நடைபெற்றது. இதன் போது சனிமௌன்ட் விளையாட்டு கழகத்தை 5:0 என்ற கோல் அடிப்படையில் ஏறாவூர் ஜங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகம் இறுதிப்போட்டியில் வெற்றி கொண்டு மர்ஹூம் எம்.ஐ.எம் இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கௌரவ அதிதியாக முன்னாள் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான கே.எம் அப்துல் ரஸாக் கலந்து கொண்டதுடன் ஏனைய முக்கியஸ்தர்கள் உதைப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்படி இறுதி சுற்றுப்போட்டியை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்ததுடன் சீரற்ற நுழைவுச்சீட்டு பரிசோதனைகளினால் சிறிய குழப்பங்களும் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments