Vettri

Breaking News

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - பலர் ஆபத்தான நிலையில்..




 பதுளை - கொழும்பு பிரதான வீதியின் எல்ல ஹல்பே பகுதியில் இன்று(12) மாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விசாரணை

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - பலர் ஆபத்தான நிலையில் | Accident Today Colombo Badhula Road

இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பெண்கள், மூன்றரை வயது சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள், தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments