Vettri

Breaking News

உயர்தர பரீட்சை முடிவுகள் தொடர்பில் தற்பொழுது வெளியான உத்தியோகபூர்வ தகவல்!!




கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறான போலி செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜயசுந்தர கூறியுள்ளதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த வாரம் அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.. கல்வி அமைச்சு இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெறுபேறு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments