தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் - விலையில் சடுதியான வீழ்ச்சி...
நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.
அந்தவகையில், கடந்த காலங்களில் அதிகரிப்பை காட்டி இருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 620,556 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் 8 ஆம் திகதி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 622,935 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 கிராம் பவுண்
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்று இன்றைய தினம் 175,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண்(8 கிராம்) ஒன்று 160,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்று 153,250 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கத்தின் சடுதியாக அதிகரித்த நிலையில் தற்போது குறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
முழு விபரம்
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 620,556.00
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,890.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 175,150.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,070.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,550.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,250.00
No comments