எதிர்காலத்தில் மாணவர்களின் நலனுக்காக புதுவிதமான பாடசாலை கல்வி நடைமுறை வேலை திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்..
ஒரு வருடத்தில் பாடசாலையில் உள்ள மூன்று தவணைகளுக்கும் சேர்த்து பொதுவாக ஒரு பாடத்திற்கு ஒரு பாட புத்தகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஒவ்வொரு தவணைக்கும் தனித்தனியாக ஒரு புத்தகம் வீதம் வருடத்துக்கு மூன்று புத்தகங்கள் ஒரு பாடத்திற்காக வழங்கப்படும் நடைமுறையை கொண்டு வர உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.. இதன் மூலம் தற்போது அதிகமான பாரம் கொண்ட பாடப் புத்தகங்களின் சுமையை சுமந்து கொண்டு செல்லும் மாணவர்களின் முதுகுத்தண்டின் நலனை பேணுவதற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்காக அதிகமான பணத்தை செலவிடுவதால் மாணவர்களின் போசாக்கு நலனை பாதுகாப்பதற்கு தேவையான நல்ல உணவுகளை வழங்குவதற்கு பெற்றோர்களால் பணத்தை ஒதுக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலைமையை 2024 முதல் மாற்றுவதற்காக முதலாம் ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் இனிமேல் தவணைக்கு ஒரு பரீட்சை என பரீட்சைகளை நடத்தாமல் ஒரு வருடத்திற்கு பொதுவாக வருட இறுதியில் ஒரு பரீட்சை மட்டும் நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இருப்பினும் ஒவ்வொரு பாடத்தின் கணிப்பீட்டு ரீதியான மதிப்பெண்கள் அனைத்தும் கணநியில் தரவுகளாக பதிவு செய்யப்பட்டு அவை ஆண்டு இறுதியில் இறுதி பரிட்சை மதிப்பெண்களுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
No comments