Vettri

Breaking News

யாழில் கோர விபத்து - கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு!




 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றிரவு (8) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் கம்பம் ஒன்றில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை 

உயிரிழந்துள்ள குறித்த நபர் மன்னார் முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments