Vettri

Breaking News

இலங்கை ரூபாய் தொடர்பில் நல்ல செய்தி




2023 ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 12.8 வீதத்தால் அதிகரித்தது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 18 வரையான வருடத்தில் மற்ற நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சிறப்பாகச் செயற்பட்டுள்ளது. யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியும் அந்நிய செலாவணி நகர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இதுவரை யெனுக்கு எதிராக ரூபாய் 23.8 சதவீதமும், பவுண்டிற்கு எதிராக 6.5 சதவீதமும், யூரோவுக்கு எதிராக 10.4 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 13.2 சதவீதமும் உயர்ந்துள்ளது.

No comments