போலி பத்திரம் தயாரித்தமை தொடர்பில் சட்டத்தரணி தகுதி நீக்கம்...
தவறான பத்திரம் தயாரித்து நோட்டரி சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.மத்திய மாகாணத்தின் மேல் நீதிமன்றத்தின் பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பிரகாரம், அச்சட்டத்தரணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
போலி பத்திரம்
இதன்படி, 1999 பெப்ரவரி 05 ஆம் திகதி, மஹிந்த ரத்நாயக்க எனும் சட்டத்தரணி பொய்யான பத்திரம் தயாரித்தமை தொடர்பில், நோட்டரி கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சுமத்தி, உச்ச நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீண்ட விசாரணையின் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ரத்நாயக்க என்ற சட்டத்தரணியின் பெயரை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments