Vettri

Breaking News

திருகோணமலை விகாரையின் நிர்மாணப் பணிக்கான அனுமதி மறுப்பு - செந்தில் தொண்டமான்




 திருகோணமலை - நிலாவெளி பெரியகுளம் பகுதியில் விகாரை நிர்மாணிப்பதால் ஏற்படும் பிரச்சினை காரணமாக நிர்மான பணிக்காக கோரப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிர்மானப் பணிக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசமாகும்.

மீளப்பெற்ற கடிதம்

திருகோணமலை விகாரையின் நிர்மாணப் பணிக்கான அனுமதி மறுப்பு - செந்தில் தொண்டமான் | Construction Viharai Permission Denied

பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள்.

பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்ட காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments