கிழக்கு ஆளுநர், சம்பந்தனின் தலையீட்டால் விகாரை அபிவிருத்திப் பணி இடைநிறுத்தம்..
திருகோணமலை - நிலாவெளி பொரலுகந்த ரஜமகா விகாரையில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேச செயலாளர் பொன்னையா தனேஸ்வரன் தமக்கு அறிவித்துள்ளதாக பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி சுகித வன்சதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
எழுத்து மூலம் அறிவித்தல்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கடந்த 8 ஆம் திகதி கிழக்கு ஆளுநருக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலாளர் இந்தச் செயற்பாடுகளை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வாய்மொழி பணிப்புரையின் அடிப்படையில், விகாரையைச் சூழவுள்ளோரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் அபிவிருத்திப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடவத் சத்தறை பிரதேச செயலாளர் பொன்னையா தனேஸ்வரன் அனுப்பியுள்ள எழுத்து மூல உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த உத்தரவின் பிரதிகள் ஆளுநரின் செயலாளர், மாவட்டச் செயலாளர், திருகோணமலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், நிலாவெளி காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்புக்குளம் கிராம சேவகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம், நகர் மற்றும் கடவத் சதாரா பிரதேச செயலகப் பிரிவின் நிலாவெளி 6 ஆம் அஞ்சல் பகுதியில் பௌத்த தொல்பொருள் சான்றுகளுடன் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட தொல்பொருள் பிரதேசத்தில் அமைந்துள்ள நிலாவெளி பொரலுகந்த ரஜமகா விகாரையின் அபிவிருத்தி பணியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய உடனடியாக அபிவிருத்திப் பணிகளை நிறுத்துமாறு பிரதேச செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
No comments