கொலை சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைது!
மட்டக்குளி பிரதேசத்தில் மோதலின் போது நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தை பகுதியில், கடந்த ஜூலை 24ஆம் திகதி இரவு இடம்பெற்ற தாக்குதலில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 16 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments