Vettri

Breaking News

மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு !!




ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தியின் திறன் தேவையான அளவிலும் 15 வீதமாக குறைந்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தேவையில் 65 சதவீம் அனல்மின்சாரத்தையே சார்ந்துள்ளது. இதன் விளைவாக உற்பத்திச் செலவு 800 மில்லியனில் ரூபாயில் இருந்து 1,200 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில், போதுமான அளவு மழைவீழ்ச்சி கிடைத்ததனால், நீர்த்தேக்கங்கள் நிரம்பியிருந்தது, சில சமயங்களில் 70 சதவீத தேவைக்கு நீர்மின்சாரத்தையே நம்பியிருந்தோம். இன்று அது 15 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை மின்சார சபையானது தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments