Vettri

Breaking News

குறுகிய காலத்தில் பாரிய சேவையை செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் பாராட்டு -




 
















கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்கள், அந்ததந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


இதன்போது, நேற்று ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர்,செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு மாதக்காலங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 


கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 700 ஆசிரியர் நியமனம்,5000 இளைஞர்களுக்கு  IT வேலைவாய்ப்பு, இந்திய அரசிடமிருந்து 2371 மில்லியன் கடனற்ற நிதியுதவி, ஜப்பான் அரசுடன் இணைந்து அருகம்பேவில் உலாவுதல் (surff) ஆரம்பித்தல், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்தல்,கிழக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக கோர்டிலா குரூஸ் கப்பலை வரவழைத்தமை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி உரிமை பெற்றுக்கொடுத்தமை, பீச்  கிளீனிங் வேலைத்திட்டத்தின் ஊடாக ஐம்பதாயிரம் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்,ஒரு இலட்சம் பிளாஸ்டிக் அல்லாத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டமை, சட்ட ஒழுங்கை சீராக செயற்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்களை தெரிவித்துடன், ஆளுநர் மத சார்பற்ற வகையில் நியாயமான முடிவுகளை அனைவருக்கும் உதவும் வகையில் செயற்படுவதாகவும் அறிய கூடியாதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.மேலும் மட்டக்களப்பு மாவட்ட மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நியாமான விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்பியும் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை, ஆனால் ஆளுநராக செந்தில் தொண்டமான் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, ஓரளவேனும் நியாயமான முறையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (dcc) நடத்தக்கூடியதாக  உள்ளது என சுட்டிக்காட்டினார்.இன்றைய தினம் காலையில் மட்டக்களப்பு நாவலடிப்பகுதியில் (கொழும்பு வீதியில்) அத்துமீறி சட்டவிரோதமாக பிடிக்கப்படும் காணிகள் தொடர்பான விடயங்களை ஆராயவும் தடுக்கவும் இன்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர் மேலும் தெரிவிக்கையில். நாவலடி பிரதேசத்தில் பாரியளவில் சட்ட விரோத காணிக் கொள்ளை இடம்பெறுவது கையும் களவுமாக பிடிபட்டதுடன் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது இவ் கொள்ளைகள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். எவ் சமூகத்தினர் ஆயினும் சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபடுவது குற்றம் குற்றமே. இவற்றுக்கு பின்னால் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தரகுப் பணத்துக்காகவும் தங்களது கட்சியின் தங்களை சார்ந்தவர்களின் சுய நலனுக்காகவும் இவ் காணிகள் ஆனது சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்பட்டு வருக்கின்றது. வெளியில் பிரதேசவாதம், சமூகவாதம், இனவாதம் கதைத்து மக்களை தங்களது சுய இலாபங்களுக்காக பிரித்து வைத்து தங்களின் சுய தேவைகளை இவர்கள் மறைமுகமாக ஒற்றுமையாக செயல்ப்பட்டு இவ்வாறான சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறான செயல்பாடுகளை தடுக்க வேண்டியவர்களே இவ்வாறான சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவது அதற்குரிய ஆதரவினை வழங்குவது அனைத்து இன மக்களின் எதிர்கால சந்ததியினரின் இருப்புக்களை கேள்விக்குறியாக்குதற்கு சமமானதாகும். புளுட்டுமானோடை சட்ட விரோத காணி அபகரிப்பானது ஓர் பக்கம் பாரியளவில் நடந்து வரும் அதே வேளை அதற்கு ஈடாக இங்கும் போட்டி போட்டுக்கொண்டு இங்கும் நடந்து வருகின்றது. இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகள் உடனடிக்க நிறுத்தப்படவேண்டும் எவ் சமூகம் சட்டவிரோதமாக செயல்படினும் குற்றம் குற்றமே. இவற்றுக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். என தெரிவித்தார்

No comments