பெரமுனவை பிளவுபடுத்த சதித்திட்டம் - அம்பலப்படுத்தினார் பசில்!!!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை பிளவுபடுத்த பலர் சதித்திட்டம் தீட்டுவதாக கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தச் சதியாலும் மொட்டுக் கட்சியைப் பிளவுபடுத்த முடியாது என்பதை வெளிப்படையாகக் கூற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இல்லாமல் செய்ய திட்டம்
பெரமுனவை பிளவுபடுத்த சதித்திட்டம் - அம்பலப்படுத்தினார் பசில் | Sri Lanka Podujana Peramuna Conspiracy To Split
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர் மொட்டுக் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் சிலர் செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த தரப்பினரை தற்போது அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களுக்கான தண்டனையை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராகவுள்ளதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல்களில் தரமான வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் எனவும் மொட்டுக் கட்சி எந்தவொரு தேர்தலிலும் தோற்காது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments