Vettri

Breaking News

திருமண நிகழ்வில் உடல் நலக்குறைவால் பெண் மரணம்




 


ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹொரணையில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியர் எனவும் மீகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை, கோனாபொல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட போது குறித்த பெண் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

குறித்த பெண் உடனடியாக ஹொரண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனையில், உணவு சுவாசக் குழாயில் சிக்கியதால் ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்துள்ளது.

No comments