ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!!
கொழும்பு, மருதானையின் சில பகுதிகளுக்குள் இன்று நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, வணக்கத்துக்குரிய பகொட விஜிதவன்ச தேரர், ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 11 ஆம் திகதி நண்பகல் 12. 00 மணி ஆகஸ்ட் 12 ஆம் திகதி நண்பகல் வரை மருதானை பொலிஸ் நிலைய பகுதி, டின்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), டி.பி.ஜெய மாவத்தை (டலி வீதி), ஒரபிபாஷா மாவத்தை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணிகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments