Vettri

Breaking News

தமிழக அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போன இலங்கைப் பெண்!.




 இந்தியாவிலுள்ள தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவர் முறைப்பாடு

தமிழக அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போன இலங்கைப் பெண்! | Sl Woman Disappeared From Tamil Nadu Refugee Camp

அவர் கடந்த வருடம்(2022) ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்ததாக தமிழக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பில் மண்டபம் காவல்நிலையத்தில், அவரது கணவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தமிழக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments