Vettri

Breaking News

மர்மமான முறையில் காணாமல்போயுள்ள கோடீஸ்வர வர்த்தகர்!




கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலொன்ன நெடோல பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று புதன்கிழமை (16) பணத்துடன் தனது வேனில் தெனியாய நகருக்குச் சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் வீடு திரும்பாததால் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, அனில்கந்த பொது மயானத்துக்கு அருகில், பணத்தை கொண்டு வருவதற்காக வர்த்தகர் சென்ற வேனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். காணாமல்போன வர்த்தகரை கண்டுபிடிப்பதற்காக கொலொன்ன பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments