Vettri

Breaking News

பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையின் பின்னால் கைவிட்டுச் சென்ற தாய் கைது...!




பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், அதனை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால், கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்து மூன்று நாட்களேயான அந்த குழந்தை, வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments