அனுரகுமார திஸாநாயக்கவுடன் மோதுவதற்கு நான் தயார் - சாகர காரியவசம்!!!
மக்கள் விடுதலை முன்னணியின்தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் சட்டப் போருக்குத் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டு நாணயக் கணக்கை வெளிநாட்டு நிலத்தில் பராமரித்து வருகிறது என்று குற்றச்சாட்டியமைக்காக காரியவசத்திற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்ததாக அனுரகுமார திஸாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார் அனுரகுமார திஸாநாயக்கவுடன் மோதுவதற்கு நான் தயார் - சாகர காரியவசம்
இதற்கு பதிலளித்த காரியவசம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு எதிரான தனது வழக்கை நீதிமன்றில் முன்வைப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு எதிராக திஸாநாயக்கவின் பொய்யான பேச்சுக்கள் தொடர்பில் நீதிமன்றில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் பல இருப்பதாகவும் அவர் கூறினார்.
No comments